×

அமெரிக்காவில் கொரோனோ பேராபத்து முடிவுக்கு வந்தது: அதிபர் ஜோ பைடன்

அமெரிக்கா: உலகில் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளது என்று அமெரிக்கா அதிபர் கூறியுள்ளார். என்று உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துள்ளது. கொரோனாவால் சில பிரச்சினை உள்ளது. அதனை ஒழிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் ஆனால் தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.  நீங்கள் கவனித்தால், இங்கு யாரும் மாஸ்க் அணியவில்லை. எல்லோரும் நல்ல நிலையில் இருப்பது போல் தெரிகிறது. அதனால் அது கால நிலை மாறுகிறது என்று நினைக்கிறேன். அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று நான் நினைக்கிறேன். கடந்த வாரம், கோவிட் -19 இலிருந்து இறப்புகளின் எண்ணிக்கை மார்ச் 2020 க்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். …

The post அமெரிக்காவில் கொரோனோ பேராபத்து முடிவுக்கு வந்தது: அதிபர் ஜோ பைடன் appeared first on Dinakaran.

Tags : United States ,Chancellor ,Joe Biden ,USA ,United ,States ,president ,coronavirus pandemic ,Protest ,
× RELATED டிரெண்டாகும் டம்மி டைம்!