- துருக்கி
- அஜர்பைஜான்
- பாக்கிஸ்தான்
- சிந்தூர் நடவடிக்கை
- இந்தியா
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
- காஷ்மீர்
- இந்தியர்கள்
- முழு இந்தியா...
காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா நடத்திய ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையில் துருக்கி, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து அந்த நாடுகளுக்கு சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து, அந்த நாடுகளில் படப்பிடிப்புகளை உடனே நிறுத்தும்படி திரைத்துறையை வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் ஷியாம்லால் குப்தா கூறுகையில், ‘இந்திய திரைப்படங்களை துருக்கியிலோ, அஜர்பைஜானிலோ படமாக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுத்துள்ளோம். அந்த நாடுகளை சேர்ந்தவர்கள் யாராவது இந்திய திரைப்படங்களில் பணியாற்றினால், அவர்களின் விசாக்களை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்விஷயம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
