×

ஓடும் வேனில் திடீர் தீ தந்தை, மகள் தப்பினர்

கும்பகோணம்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் கும்பகோணம் சாலையில் வசிப்பவர் ராஜ்மோகன் (60). பஞ்சர் கடை வைத்துள்ள இவரது வீட்டில் குளியலறை கட்டும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ராஜ்ேமாகன், மகள் பவித்ராவுடன் (23) டைல்ஸ் வாங்குவதற்காக வேனில் கும்பகோணம் சென்றார். திருமங்கலச்சேரியை சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் (51) வேனை ஓட்டி சென்றார். கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் டைல்ஸ் வாங்கி விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். தாராசுரம் பகுதி தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, வேனில் இயந்திர கோளாறால் முன் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. எதிரே வந்த கார் டிரைவர் பார்த்து சத்தம் போட்டதால், ராஜேந்திரன் வேனை நிறுத்தினார். பின்னர் மூவரும் அவசரமாக இறங்கினர். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்….

The post ஓடும் வேனில் திடீர் தீ தந்தை, மகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Rajmohan ,Kumbakonam Road, Valangaiman Circle, Tiruvarur District ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா