சென்னை: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் இந்திய ராணுவம் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. எல்லை தாண்டி இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கவுள்ளதாக இளையராஜா நேற்று அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு எதிராக, நமது உண்மையான ஹீரோக்கள், எல்லைகளில் துணிச்சலுடன் சண்டையிட்டு வருகின்றனர். நமது நாட்டு ராணுவ வீரர்கள் எதிரிகளை மண்டியிட செய்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது முதல் சிம்பொனி இசைக்கு ‘வேலியன்ட்’ என பெயரிடப்பட்டது. நமது வீரர்களின் துணைச்சல் மிகுந்த முயற்சிக்காக எனது இசை கச்சேரி வருவாய் மற்றும் ராஜ சபா உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை ‘தேசிய பாதுகாப்பு நிதிக்கு’ நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
