×

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஓ…! சுகுமாரி

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஓ…! சுகுமாரி’ என்ற படத்தில் ஹீரோவாக வீர் நடிக்கிறார். மற்றும் ஜான்சி, விஷ்ணு, ஆம்னி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி னிவாஸ் நடிக்கின்றனர். பரத் தர்ஷன் இயக்க, கங்கா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் உருவாகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. தாமினி என்ற கேரக்டரில் அவர் நடித்து வருகிறார். கிராமத்து கதையுடன் படம் உருவாகிறது. சி.ஹெச்.குஷேந்தர் ஒளிப்பதிவு செய்ய, பரத் மஞ்சிராஜு இசை அமைக்கிறார்.

Tags : Aishwarya Rajesh ,Chennai ,Jhansi ,Vishnu ,Omni ,Muralidhar ,Anand ,Anjimama ,Shivanand ,Kota Jayaram ,Kavireddy nivas ,Bharat Darshan ,Maheshwar Reddy Mooli ,Ganga Entertainment ,Dhamini ,
× RELATED டாக்ஸிக் வீடியோவில் சர்ச்சைக்குரிய...