ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள எமரால்டு கே.கே மட்டம் பகுதியை சேர்ந்தவர் புட்சித்தன் (எ) கன்னட தாத்தா (67). இவர், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவே, அவர்கள் எமரால்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், புட்சித்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இவ் வழக்கு ஊட்டியில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணன் நேற்று தீர்ப்பளித்தார். இதில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புட்சித்தனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது….
The post 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
