×

சம்பத் ராமுக்கு மல்லுவுட் விருது

சென்னை: மலையாள திரையுகினருக்கு வழங்கப்படும் சிறந்த விருதான ‘மலையாளம் புரஷ்காரம் 1200’ விருது நடிகர் சம்பத் ராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இப்போது பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மோசஸ் இயக்கும் ‘வெக்கை’, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படம், ‘சாட்டை’ புகழ் அன்பழகன் இயக்கும் ’மனிதி’, ‘கங்கணம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Tags : Sampath Ram ,Mollywood ,Chennai ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி