×

சென்னையில் இன்று சன் டி.வி.யின் சிறப்புப் பட்டிமன்றம்: அனுமதி இலவசம்

சென்னை: உலகம் முழுவதும் சன் டி.வி. நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சிறப்புப் பட்டிமன்றம் அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற உள்ளது. அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மகளிர் சிறப்புப்பட்டிமன்றத்தில் பாரதி பாஸ்கர் தலைமையில் 6 பேச்சாளர்கள் இரு அணி களாக பங்கேற்று, வாதங்களை முன்வைக்கிறார்கள்.

சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் பின்புறத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (புதன்கிழமை) மாலை 6:30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த மகளிர் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்ச்சியை சன் டி.வி. நேயர்கள் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம். இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க சன் டி.வி. நேயர்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற உள்ள இந்த மகளிர் சிறப்புப் பட்டிமன்றம், அன்னையர் தினத்தன்று மே 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சன் டி.வியில் ஒளிபரப்பாக உள்ளது.

Tags : Sun TV ,Chennai ,Mother's Day ,Bharathi Bhaskar… ,
× RELATED மாடியில் மயக்கிய பூனம் பஜ்வா