×

பாக்யராஜூக்கு முருங்கைக்காய்களை பரிசளித்த படக்குழு

சென்னை: வில்லி திருக்கண்ணன் எழுதி இயக்கியிருக்கும் படம், ‘ஆண்டவன்’. வில்லியம் பிரதர்ஸ் தயாரித்துள்ளது. டாக்டர் முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளனர். கலெக்டர் வேடத்தில் கே.பாக்யராஜ் நடித்திருக்கிறார். மற்றும் யூடியூபர் மகேஷ், வைஷ்ணவி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா, டாக்டர் முத்துச்செல்வம் நடித்துள்ளனர்.

மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு கபிலேஷ் இசை அமைத்துள்ளார். சார்லஸ் தனா பின்னணி இசை அமைத் துள்ளார். வரும் 16ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜூக்கு முருங்கைக்காய்களை படக்குழு பரிசளித்தது. ‘மக்களே இல்லாமல் காணப்படும் கிராமங்களை உடனே காப்பாற்றுங்கள்’ என்ற கருத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Tags : Bhagyaraj ,Chennai ,Willy Thirukannan ,William Brothers ,Dr. Muthuchelvam ,Selaiyur S.S. Suresh ,K. Bhagyaraj ,Mahesh ,Vaishnavi ,Ganja Karuppu ,Muthukkalai ,Hello Kandasamy ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு