×

விஜய் சேதுபதி நடிக்கும் தலைவன் தலைவி

சென்னை: விஜய் சேதுபதியுடன் ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘ஏஸ்’ என்ற படம், வரும் 23ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள 52வது படத்துக்கு ‘தலைவன் தலைவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை பாண்டி ராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், யோகி பாபு நடித்திருக்கின்றனர். ஏற்கனவே ‘19(1)(ஏ)’ என்ற மலையாள படத்தில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் சேர்ந்து நடித்திருந்தனர். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தில், பரோட்டா மாஸ்டர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags : Vijay Sethupathi ,Chennai ,Vasanth ,Pandi Raj ,Sathya Jyothi… ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி