×

ஒர்க்கர் ஆனார் ஜெய்

சென்னை: கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சீசர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘ஹண்டர்’ திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் வினய் கிருஷ்ணா, தமிழ் சினிமாவில் ‘ஒர்க்கர்’ (Worker) படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  பிரைமுக் பிரெசண்ட்ஸ் சார்பில் எம்.ஷோபனா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். யோகி பாபு மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் நாகிநீடு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். படம் குறித்து இயக்குநர் வினய் கிருஷ்ணா கூறுகையில், “முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும், ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் இருக்கும். ஜிப்ரான் இசையமைக்கிறார். மே தினத்தில் படத்தின் லுக் வெளியானது’’ என்றார்.

Tags : Jai ,Chennai ,Vinay Krishna ,M. Shobana Rani ,Primekh Presents… ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி