×

சிம்ரனுக்கும் எனக்கும் நெருக்கமான காட்சிகள்: சசிகுமார் சலசலப்பு

சென்னை: அபிஷன் ஜீவிந் எழுதி இயக்கியுள்ள படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடித்துள்ளனர். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளனர். வரும் மே 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சசிகுமார் பேசியதாவது: எனக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்ட பலர், ‘என்னது… சசிகுமாருக்கு ஜோடி சிம்ரனா?’ என்று அதிர்ச்சி அடைந்தனர்.

நானெல்லாம் சிம்ரனுடன் ஜோடி சேரக்கூடாதா? எனக்கும், அவருக்கும் படத்தில் நெருக்கமான காட்சிகள் இருக்கிறது. அதை இயக்குனர் மறைத்து வைத்திருக்கிறார். எல்லோருக்கும் சிம்ரனை பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். அவர் என் மனைவியாக நடித்தாலும், அவர்தான் ஹீரோயின். நான்தான் ஹீரோ. முதல்முறையாக ஈழத்தமிழ் பேசியுள்ளேன். ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் என் குடும்பம், என்னென்ன பிரச்னையை சந்திக்கிறது என்பது கதை.

Tags : Simran ,Sasikumar ,Abhishan Jeevind ,Yogi Babu ,Aravind Viswanathan ,Shawn Roldan ,Mohan Rajan ,Million Dollar Studios ,MRP Entertainment… ,
× RELATED ரெட்ட தல விமர்சனம்…