×

ஜெய் நடிக்கும் வெப்தொடர் ‘லேபிள்’

சென்னை: திரைக்கு வந்த ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கிய வரும், பாடலாசிரியரும், பாடகரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் வெப்தொடர், ‘லேபிள்’. இதற்கு ஜெயச்சந்திர ஹாஸ்மி கதை எழுத, முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கிறது. பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். யுகபாரதி, மோகன் ராஜன், லோஹன், அருண்ராஜா காம ராஜ் ஆகியோர் பாடல் கள் எழுதுகின்றனர். இதில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண்ராஜ், மன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி நடிக்கின்றனர்.  இத்தொடர் பற்றி அருண்ராஜா காமராஜ் கூறுகையில், ‘ஒருவன் எந்தப் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கிறான் என்பதை வைத்தே அவனது குணாதிசயம் இருக்கும் என்ற பொதுப்படை எண்ணம் பலபேருக்கு இருக்கிறது. இதுவே  அவர்கள் தவறான  வழியை நோக்கிச்  செல்ல காரணம் ஆகிறது. தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை சிலரால் மட்டுமே மாற்ற முடிகிறது. சமூகம் பொதுப்படைப் பார்வையை மாற்றி அமைக்கும் என்றால், ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை தானே தீர்மானித்துக் கொள்ள முடியும்’ என்றார்.


Tags : Jay ,
× RELATED சில்லிபாயிண்ட்…