×

டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட கடமை பாதை, நேதாஜி சிலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி

புதுடெல்லி: டெல்லியில் புதுப்பிக்கப்பட்டு ‘கடமை பாதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ராஜபாதையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். டெல்லியில், குடியரசு தின விழாவின் போது, ராணுவ அணிவகுப்புகள் பாரம்பரியமாக ராஜபாதையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பாதை, ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை சுமார் 3 கிமீ தூரம் கொண்டது. தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்டவை சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ராஜபாதையையும் புதுப்பித்து, ‘கடமை பாதை’ (கர்தவ்ய பாத்) என ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த கடமை பாதையையும், இந்தியா கேட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முழு உருவச்சிலையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘ராஜபாதை அதிகாரத்தின் சின்னமாக இருந்தது. இதனை பொதுமக்களுக்கு சொந்தமானதாகவும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கு எடுத்துக்காட்டாகவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காலனித்துவ மனநிலையின் தடயத்தை அகற்றி புதிய இந்தியாவை ஏற்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் நடவடிக்கை இது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.* கடமை பாதையான புதிய ராஜபாதையில் 3.90 லடசம் சதுர மீட்டர் பரப்பளவு முற்றிலும் பசுமையான புல்வெளியாக மாற்றப்பட்டுள்ளது.* 15.5 கிமீ பரப்பளவில் புதிய சிவப்பு கிரானைட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.* 1,125 வாகனங்களும், இந்தியா கேட் அருகே 35 பேருந்துகளும் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.* 74 பழங்கால விளக்கு கம்பங்களும், 900 மின் கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.* 19 ஏக்கர் கால்வாய் புதுப்பிக்கப்பட்டு, படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது.* பொதுமக்கள் நடந்து சென்றபடி, உணவுகளை சாப்பிட 40 உணவு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு மாநில அரசுகளின் பாரம்பரிய உணவுகள் சமைத்து தரப்படும்.* 400 இருக்கைகள், 150 குப்பை தொட்டிகள், 650க்கும் மேற்பட்ட புதிய பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. …

The post டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட கடமை பாதை, நேதாஜி சிலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Netaji ,Delhi ,New Delhi ,Subash Chandraphos ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!!