×

இந்தியாவில் தயாரிக்கப்படும் 47% நோய் எதிர்ப்பு மருந்து அரசு ஒப்புதல் இல்லாதவை: தனியார் நிறுவனங்கள் அடாவடி

புதுடெல்லி: ‘அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பல்கலைக் கழகமும், டெல்லியில் உள்ள இந்திய சுகாதார அமைப்பும் இணைந்து தனியார் நிறுவனங்களின் நோய் எதிர்ப்பு மருந்துகள் குறித்து ஆய்வு நடத்தின. 5 ஆயிரம் நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களை சேர்ந்த 9 ஆயிரம் மொத்த விற்பனையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:* இந்தியாவில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் 85-90 சதவீத மருந்துகள் தனியார் நிறுவனங்களினால் தயாரிக்கப்படுகின்றன. * இதில், அரசு மருத்துவமனைகள், முகாம்களில் வினியோகிக்கப்பட்ட மருந்துகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை. * இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் அதிகளவிலான நோய் எதிர்ப்பு மருந்தாக அசித்ரோமைசின் 500மிகி 7.6%, செபிக்சிம் 200மிகி 6.5 % பயன்படுத்தப்பட்டு உள்ளது.* கடந்த 2019ம் ஆண்டில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகளில் 47.1 சதவீதம், ஒன்றிய அரசின் மருந்து கட்டுபாட்டு துறை ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளன….

The post இந்தியாவில் தயாரிக்கப்படும் 47% நோய் எதிர்ப்பு மருந்து அரசு ஒப்புதல் இல்லாதவை: தனியார் நிறுவனங்கள் அடாவடி appeared first on Dinakaran.

Tags : India ,Adavadi ,New Delhi ,Boston University ,US ,Indian Health Organization ,Delhi ,
× RELATED அடாவடி கட்டண வசூலில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி