×

கேங்கர்ஸுக்கு விதை போட்டது வடிவேலு: சொல்கிறார் சுந்தர்.சி

சென்னை: ‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. கேத்ரின் தெரசா, ஹீரோயின். சத்யா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சுந்தர் சி பேசியதாவது, “இந்த படத்திற்கு விதை போட்டது வடிவேலு. சின்ன உரையாடலில் தொடங்கிய இப்படம் இப்போது முழு படமாக உங்கள் முன்னாடி வந்து நிற்கிறது. இந்த படம் உண்மையிலே தமிழில் இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒரு ஜானர். மனி ஹெய்ஸ்ட் போன்று நம்ம ஊர் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு படம். ஒரு நாள் வடிவேலு டைட்டில் என்னவென்று கேட்டார். கேங்க்ஸ்டர் மாதிரி ஸ்டைலிஷா சின்னதா ஒரு டைட்டில் வேணும், ஆனா எதுவுமே செட் ஆகமாட்டிங்குது என்றேன். அதற்கு கேங்கர்ஸ் என அசால்டாக சொல்லிவிட்டு போய்விட்டார். அவர் வெள்ளந்தியா சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப பிடித்தது. பின்பு அதையே டைட்டிலாக வைத்து விட்டோம்” என்றார்.

Tags : Vadivelu ,Chennai ,Sundar.C ,Sundar C ,Avni Cinemax ,Benz Media ,Catherine Teresa ,Sathya ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி