×

100 கோடி ரூபாய்: ஆடம்பர பங்களாவில் குடியேறிய தீபிகா படுகோன்

மும்பை: இந்திய திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், தனது கணவரும் மற்றும் பாலிவுட் முன்னணி நடிகருமான ரன்வீர் சிங், மகள் துவா ஆகியோருடன், மும்பையிலுள்ள தனது புதிய ஆடம்பர பங்களாவில் குடியேறியுள்ளார். மும்பை கடற்கரையை நோக்கி 4 மாடிகள் கொண்ட பிரமாண்டமான கட்டிடமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பங்களா, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இந்த வீடு ஷாருக்கானின் மன்னத் பங்களா மற்றும் சல்மான்கானின் கேலக்ஸி அபார்ட்மெண்ட்டுக்கு அருகில் அமைந்துள்ளது.

பல மாடிகள் கொண்ட இந்த ஆடம்பர பங்களாவில், 16வது தளத்தில் இருந்து 19வது தளம் வரை ரன்வீர் சிங், தீபிகா படுகோன் வாங்கியுள்ளனர். இது 11,266 சதுர அடி பரப்பளவு கொண்டது. தவிர, கடந்த 2021ம் ஆண்டு அலிபாக் பகுதியில் 22 கோடி ரூபாய்க்கு ஒரு பங்களாவை தீபிகா படுகோன் வாங்கியிருந்தார். ஷாருக்கானின் மன்னத் பங்களாவில் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருவதால், அவர் தனது குடும்பத்துடன் மும்பை பாலி ஹில் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தற்காலிகமாக குடியேறியுள்ளார்.

Tags : Deepika Padukone ,Mumbai ,Bollywood ,Ranveer Singh ,Dua ,
× RELATED மாடியில் மயக்கிய பூனம் பஜ்வா