×

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்

சென்னை: மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது சிலருக்கு டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே மேற்கண்ட சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்தது. மேலும், இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் எனக்கோரி நேற்று செந்தில்பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது….

The post சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji Caviet ,Chennai ,Electricity Minister ,Senthil Balaji ,Minister of Transport ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...