×

விவசாயி கொலை வழக்கில் தாய், மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(65), விவசாயி. இவரது மகள் கல்பனாவுக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பக்கத்து காட்டை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருக்கும் கல்பனாவுக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. இதுதொடர்பான வழக்கு ஓமலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அடிக்கடி இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதனிடையே கடந்த 2011  ஆகஸ்ட் 7ம்தேதி இரவு நாராயணன் வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த சின்னப்பையன், அவரது மனைவி கமலா (70), மகன் வடிவேல் (49) மற்றும் வடிவேலின் மனைவி புஷ்பவள்ளி (38) ஆகியோர் நாராயணனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொன்றனர்.  இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து சின்னப்பையன், கமலா, வடிவேல், புஷ்பவள்ளி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சின்னப்பையன் உடல் நலக்குறைவால் இறந்தார். வழக்கை நீதிபதி ரவி விசாரித்து கமலா, அவரது மகன் வடிவேல், மருமகள் புஷ்பவள்ளி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்….

The post விவசாயி கொலை வழக்கில் தாய், மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Narayanan ,Nachinambatti ,Kadaiyambatti ,Salem district ,Kalpana ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...