×

மது குடித்து 2 பேர் பலியில் திருப்பம்: சயனைடு கலந்து கொடுத்த மருமகன் அதிரடி கைது

சூலூர்: கோவை  மாவட்டம் சூலூர் அடுத்த பொன்னாக்காணியை சேர்ந்தவர் வேலுச்சாமி (55).  விவசாயி. இவரது உறவினர் மனோகரன் (50). இருவரும் நேற்று முன்தினம்  மதியம் தோட்டத்தில் மது குடித்தனர். சிறிது நேரத்திலேயே  அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர்.  நெகமம் போலீசார்  நடத்திய விசாரணையில்  மது குடித்து பலியானவர்களில் ஒருவரான  மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தின் ஒரு பகுதியை ரூ.40  லட்சத்திற்கு விற்றதும், புதிதாக ஒரு ஆட்டோ வாங்கியதும்  தெரியவந்தது.  இதனால் மனோகரனின் குடும்பத்தார் மீது போலீசாருக்கு சந்தேகம்  எழுந்தது. குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் மருமகன் சத்தியராஜ்(37) மதுவில் சயனைடு கலந்து  மனோகரனிடம் கொடுத்தது தெரியவந்தது. நிலம் விற்ற பணத்தை மனோகரன் தனக்கு தராமல் தொடர்ந்து செலவு செய்ததால், இப்படி செய்ததாக சத்தியராஜ் தெரிவித்தார். அந்த மதுவை தனது உறவினர் வேலுச்சாமியுடன் மனோகரன் குடித்துள்ளார். இதில்  இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதையடுத்து  நெகமம் போலீசார் கொலை வழக்குப்பதிந்து சத்தியராஜை கைது செய்தனர்….

The post மது குடித்து 2 பேர் பலியில் திருப்பம்: சயனைடு கலந்து கொடுத்த மருமகன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Sulur ,Veluchami ,Ponnakani ,Coimbatore district ,Manokaran ,Dinakaran ,
× RELATED 2 மகளுடன் குட்டையில் மூழ்கி பூசாரி பலி