×

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண்

வளசரவாக்கம்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. பாஜ மகளிர் அணி மாநில பொது செயலாளராக உள்ளார். இவரது கணவர் சீனிவாசன், நேற்று முன்தினம் பைக்கில் திருமங்கலம் கார்டன் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கிய 6 பேர், சீனிவாசனை வழிமறித்து பட்டா கத்தியால் வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அவரை ஓட ஓட விரட்டி சென்று, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சீனிவாசன் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீசார், சீனிவாசனை மீட்டு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய 6 பேரை தேடி வந்தனர். இதனிடையே, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த 6 பேர், பாஜ பிரமுகரின் கணவரை கொல்ல முயன்றதாக கூறி சரணடைந்தனர். விசாரணையில், அவர்களது பெயர் பிரசாந்த், பிரகாஷ், சீனிவாசன், சரவணன், ராகேஷ், கணேசன் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, கடந்த 2005ம் ஆண்டு சென்னை யானைகவுனியில் நெடுஞ்செழியன் எ ன்பவரை கொலை செய்தது தொடர்பாக பழிவாங்க கொலை முயற்சி நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : BJP ,Nadia ,Tirumangalam ,Chennai ,state general secretary ,BJP Women's League ,Srinivasan ,Tirumangalam Garden ,Saran ,
× RELATED உத்தவ், சரத்பவாருடன் மம்தா பானர்ஜி...