×

ஆசிரியர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் தேமுதிக எப்போதும் துணை நிற்கும்: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: ஆசிரியர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் தேமுதிக எப்போதும் துணை நிற்கும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தவர். அப்துல்கலாம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை முன்மாதிரியாக கொண்டு ஆசிரியர்கள் தங்களது பணியை பொதுநல சிந்தனையோடு சிறப்பாக செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர் பெருமக்களின் அனைத்து முயற்சிகளுக்கும் தேமுதிக எப்போதும் துணை நிற்கும் என உறுதி அளிப்பதோடு, தேமுதிகவின் பட்டதாரி அணியை சேர்ந்தவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ஆசிரியர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் தேமுதிக எப்போதும் துணை நிற்கும்: விஜயகாந்த் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vijayakanth ,DeMudika ,President ,President of India ,Teamuditham ,Dinakaran ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’