×

எரிமலையில் மலையேற்றம் ரஷ்யாவில் 8 பேர் பலி

மாஸ்கோ:  எரிமலையில் மலையேற்றத்தின் மீது தவறிவிழுந்து உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் காம்சாட்கா தீபகற்பத்தில் குளுசெவ்ஸ்கயா சோப்கா என்ற எரிமலை அமைந்துள்ளது. 4750 மீட்டர் உயரம் கொண்ட இந்த  மலை சிகரம் மலையேற்ற வீரர்களிடையே பிரபலமானது. இந்நிலையில் 2 வழிகாட்டிகளுடன் 10 மலையேற்ற வீரர்கள் கடந்த வாரம் மலையேற்ற பயிற்சியை தொடங்கியுள்ளனர். கடந்த சனியன்று மலைஉச்சிக்கு 500 அடி கீழே சென்றபோது மோசமான வானிலையால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்போது வீரர்கள் தவறி விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மலையேற்ற வீரர்கள் எண்ணிக்கை நேற்று 8 ஆக அதிகரித்தது. விபத்தில் இருந்து தப்பிய 4  பேரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 பேரையும் மீட்பதற்காக ஹெலிகாப்டரில் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்….

The post எரிமலையில் மலையேற்றம் ரஷ்யாவில் 8 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Gluchevskaya ,Kamsatka Peninsula, Russia ,
× RELATED இந்திய தேர்தலில் தலையீடா? ரஷ்யா புகாருக்கு அமெரிக்கா மறுப்பு