×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்சில் பெண் பக்கத்தில் தூங்கிய வாலிபருக்கு அடி உதை: சீட் கொடுத்த டிரைவர் கைது

அண்ணாநகர்: சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் கேளம்பாக்கம் வந்திருந்த அந்த பெண், பெங்களூருக்கு செல்வதற்கு நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். பின்னர் பெங்களுரூ செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் எழுந்தபோது அருகில் ஒரு வாலிபர் படுத்திருப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டதால் பஸ்சில் இருந்தவர்கள் வந்து விசாரித்துள்ளனர். அப்போது நடந்தது பற்றி தெரிவித்துள்ளார்.இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து அந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அந்த நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதன்பின்னர் அந்த பெண், ‘’எனது பக்கத்தில் அந்த வாலிபரை எப்படி படுக்க வைக்கலாம்’ என்று டிரைவரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது டிரைவர், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.இதுபற்றி அந்த பெண் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பெண்ணின் அருகே அமர்ந்திருந்த நபரின் படம் பதிவாகியிருந்தது. இந்த படத்தை வைத்து பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் தேடியபோது ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தபோது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்(33), பெங்களூருவில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்கு ஆம்னி பேருந்தில் ஏறியபோது, டிரைவர் சீட் காலியாக இருப்பதாக கூறி பெண்ணின் இருக்கை அருகே படுக்க வைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து டிரைவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியை (48) கைது செய்து அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்சில் பெண் பக்கத்தில் தூங்கிய வாலிபருக்கு அடி உதை: சீட் கொடுத்த டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Kelambakkam ,Chennai ,Bengaluru ,Koyambedu bus station ,
× RELATED பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்...