×

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் லிஸ் ட்ரஸ்!

லண்டன்: இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். லிஸ் ட்ரஸை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரதமர் தேர்தலில் தோல்வியடைந்தார். பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் நீக்கப்பட்டதை அடுத்து லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராகிறார். இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ்டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.இதையடுத்து  பிரதமர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட ரிஷி சுனக்கைவிட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற லிஸ் டிரஸ் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வானார். பிரதமராக தேர்வாகிய பிறகு பேசிய லிஸ் டிரஸ்; கடும் போராட்டத்திற்கு பிறகு பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.   இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போடியில்  வெற்றி பெற்றதையடுத்து ராணி எலிசபெத்தை  லிஸ் டிரஸ் சந்திக்க உள்ளார். இங்கிலாந்து ராணி லிஸ் டிரஸ்  பிரதமராக தேர்வு ஆனதை முறைப்படி அறிவிக்க உள்ளார். நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று சொல்லப்படுகிறது.இங்கிலாந்து பிரதமர் தேர்தலில்  ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் லிஸ் ட்ரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்….

The post இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் லிஸ் ட்ரஸ்! appeared first on Dinakaran.

Tags : Liz Truss ,Prime Minister of ,England ,London ,Prime Minister of England ,Dinakaran ,
× RELATED ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி...