×

ஊராட்சி துணைத்தலைவர் கார் தீ வைத்து எரிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக திமுகவை சேர்ந்த நாகராஜ் (42) உள்ளார். டிக்லேண்ட் லீஸ் பகுதியை சேர்ந்த இவரது கிராமத்துக்கு வாகனம் செல்ல சாலை வசதி இல்லை. எனவே கோட்டக்கல் செல்லும் சாலையில் டிக்லேண்டி லீஸ் பகுதிக்கு சுமார் 1 கிமீ முன்பு தனியார் பங்களா அருகே தனது காரை தினமும் நிறுத்தி வைப்பது வழக்கம். வழக்கம்போல நேற்று முன்தினம் தனது காரை அங்கு நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கார் தீயில் எரிந்து எலும்புக்கூடான நிலையில் நிற்பதாக நாகராஜூக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த நாகராஜ் கார் முழுமையாக தீயில் எரிந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தார். அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் காருக்கு தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து வீடியோ காட்சிகளுடன் காவல் நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிந்து, முன்விரோதம் அல்லது அரசியல் விரோதம் காரணமாக யாரும் காரை தீ வைத்து எரித்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஊராட்சி துணைத்தலைவர் கார் தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Feedi ,Nagaraj ,Nilgiri District ,Gunnur Pruthadi Union ,Malur Navarathi Council ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...