×

இன்ஜினியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் அபேஸ்; போலீசில் புகார்

சென்னை: பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 28வது தெருவை சேர்ந்த ஸ்ரீஜத் மனைவி நிம்மி (33). சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் தனியார் வங்கியில் ஆன்லைன் மூலமாக கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார். ஆனால், அதை ஆக்டிவேட் செய்யாமல் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் இவரை செல்போனில் தொடர்புகொண்ட நபர், ‘‘வங்கியில் இருந்து பேசுகிறேன். உங்களது கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். எனவே, உங்களது செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை கூறுங்கள்,’’ என தெரிவித்துள்ளார். ஆனால் நிம்மி, ஓடிபி என்னை தர மறுத்துள்ளார். மறுநாள் நிம்மியின் வங்கி கணக்கில் இருந்து 59 ஆயிரத்து 990 ரூபாய் எடுத்துள்ளதாக நிம்மிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரணை செய்தபோது, மர்ம நபர்கள் பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து நிம்மி நேற்று பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடிபி எண்ணை கூறாமலேயே வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலிருந்து பணம் பறிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

The post இன்ஜினியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் அபேஸ்; போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sreejath ,Nimmi ,28th Street, Peravallur GKM Colony ,Central Railway Station… ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்