×

லலித் மோடியுடன் உறவு முறிவு; மீண்டும் பழைய காதலனுடன் சுஷ்மிதா

மும்பை: லலித் மோடியுடன் உறவு முறிந்ததால் மீண்டும் பழைய காதலனுடன் சேர்ந்துள்ளார் நடிகை சுஷ்மிதா சென். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். முன்னாள் பிரபஞ்ச அழகி. இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவரது பல காதல்கள் முறிந்துபோயுள்ளன. கடந்த சில வருடமாக ரொஹ்மன் ஷவ்ல் என்ற வாலிபரை சுஷ்மிதா காதலித்து வந்தார். சுஷ்மிதாவை விட 11 வயது சிறியவர் ரொஹ்மன். இவர் பாடகர். சில காரணங்களால் இவர்கள் பிரிந்தனர். இதையடுத்து லலித் மோடியுடன் சுஷ்மிதா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. சுஷ்மிதாவை காதலிக்கிறேன். விரைவில் எங்களுக்கு திருமணம் நடக்கும் என லலித் மோடி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த காதலும் நீடிக்கவில்லை. திடீரென சுஷ்மிதாவின் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து லலித் மோடி நீக்கினார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சுஷ்மிதாவின் வளர்ப்பு மகள் ரெனி சென்னின் பிறந்த நாள் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மாஜி காதலன் ரொஹ்மனை அழைத்தார் சுஷ்மிதா. அவருடன் நெருக்கமாக நின்றபடி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். லலித் மோடியை வெறுப்பேற்ற அவர் இப்படி செய்ததாக சிலர் கூறுகிறார்கள். சிலரோ அவர் மீண்டும் ரொஹ்மானை காதலிக்க தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்….

The post லலித் மோடியுடன் உறவு முறிவு; மீண்டும் பழைய காதலனுடன் சுஷ்மிதா appeared first on Dinakaran.

Tags : Lalit Modi ,Sushmita ,Mumbai ,Sushmita Sen ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!