×

கைது செய்ய வந்த போலீசாருடன் ‘சரக்கு’ அடித்தேன்: ராம் கோபால் வர்மா சர்ச்சை

மும்பை: தெலுங்கு, இந்தியில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராம்கோபால் வர்மா. அவரை கைது செய்ய வந்த போலீசாருடன் சேர்ந்து மது அருந்தியதாக பேசியுள்ளார். இது குறித்து ராம் கோபால் வர்மா பேசும்போது, ‘‘நான்கு வருடங்களுக்கு முன் எனது டிவிட்டர் பக்கத்தில் நான் செய்த பதிவு ஒன்று சர்ச்சையானது. அதற்காக எந்த தகவலும் தெரிவிக்காமல் பிடிவாரண்ட் உடன் என்னை கைது செய்ய போலீசார் சமீபத்தில் எனது வீட்டிற்கு வந்தனர். இந்த தகவல் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட் சொல்லிதான் எனக்கு தெரியவந்தது. எனது வழக்கறிஞரிடம் இது பற்றி பேசியதற்கு இந்த வழக்கில் சட்டப்படி என்னை கைது செய்ய முடியாது என்று கூறினார். இந்த தகவலை என்னை கைது செய்ய வந்த போலீசாரிடம் சொன்னேன். அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தனர். அந்த காவலர்களை வீட்டிற்குள் அழைத்தேன். அவர்கள் என்னுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, சிரித்து பேசிவிட்டு சென்றார்கள்’’ என்றார். ராம் கோபால் வர்மாவின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Ram Gopal Varma ,Mumbai ,Ramkopal Varma ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை