×

அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 18 பாஜவினருக்கு முன்ஜாமீன்

மதுரை:  மதுரை விமான நிலைய பகுதியில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் அவனியாபுரம் போலீசார், பாஜவினர் பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி 18 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  மனுதாரர்கள் தரப்பில் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாஜவினர் 17 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கினார். …

The post அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 18 பாஜவினருக்கு முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : BJP ,Madurai ,Avaniyapuram ,Tamil Nadu ,Finance Minister ,PDR Palanivel Thiagarajan ,
× RELATED ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு