×

செருப்புகள் ஜாக்கிரதை ஷூட்டிங்கில் சிங்கம்புலி தலையீடா? இயக்குனர் விளக்கம்

சென்னை: ராஜேஷ் சூசைராஜ் இயக்கியுள்ள ‘செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற வெப்தொடர் ஜீ5ல் வெளியானது. எஸ் குரூப் சிங்காரவேலன் தயாரிப்பில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபீதா ராய், உடுமலை ரவி, பழனி, சேவல் ராம், டாக்டர் பிரபாகர் நடித்திருக்கின்றனர். தொடர் சம்பந்தமான நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் ராஜேஷ்.எம் பங்கேற்றார். மற்றும் ஜீ5 கவுசிக் நரசிம்மன், சிங்காரவேலன், ஒளிப்பதிவாளர் கங்காதரன், இசை அமைப் பாளர்கள் எல்.வி.முத்து, கணேஷ் மற்றும் கதை, வசனகர்த்தா எழிச்சூர் அரவிந்தன் பங்கேற்றனர்.

பிறகு சிங்கம்புலி பேசுகையில், ‘செருப்பு, டெட்பாடி ஆகியவற்றை வைத்து அருமையான கதை எழுதிய எழிச்சூர் அரவிந்தனுக்கு பாராட்டுகள்’ என்றார். ராஜேஷ் சூசைராஜ் பேசுகையில், ‘ஷூட்டிங்கில் சிங்கம்புலி டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள். அது பொய். நிறைய காட்சிகளுக்கு அவர் புதுப்புது ஐடியாக்கள் கொடுத்தார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண். விவேக் ராஜகோபால் சிறப்பாக நடித்துள்ளார்’ என்றார்.

Tags : Singampuli ,Chennai ,Rajesh Soosairaj ,Zee5 ,S Group Singaravelan ,Vivek Rajagopal ,Aira Agarwal ,Manohar ,Indrajith ,Mapla Ganesh ,Hussain ,Sabitha Roy ,Udumalai Ravi ,Palani ,Seval ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு