×

தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி திருவருட் பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா 52 வாரங்கள் சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருவருட் பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா 52 வாரங்கள் முக்கிய நகரங்களில் சிறப்பாக நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்றுஇந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்  திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவினை சிறப்பாக நடத்திட தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2022-2023ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பில், ‘உயிர்த்திறள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (05.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 வது ஆண்டும் (05.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது.அதன்படி, தமிழக அரசு, திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்றினை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இச்சிறப்புக் குழுவின் கூட்டம் இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கம், வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கம் மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டு ஆகிய  மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை, 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் திரு. இரா. கண்ணன், இ.ஆ.ப., திருமதி ந. திருமகள், திருமதி எம். கவிதா, குழுவின் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், உறுப்பினர்கள் திருமதி. சாரதா நம்பி ஆரூரன், திரு. அருள்நந்தி சிவம், திரு. கே.என். உமாபதி, திரு. உமாபதி, திருமதி. தேசமங்கையர்க்கரசி, திரு. மெய்யப்பன், முனைவர். உலகநாயகி, டாக்டர். சக்திவேல் முருகனார், திரு. என். இளங்கோ, திரு. எம்.கலைச்செல்வன், திரு. ஜி. சந்திரகாசு மற்றும் இணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்….

The post தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி திருவருட் பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா 52 வாரங்கள் சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvarat ,Prakasavallar ,Chief Minister of Tamil Nadu ,Minister ,Segarbabu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,G.K. ,Stalin ,Thiruvarat Prakasavallar ,Prakashallar ,Seagarabu ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம்...