×

வில்லன் ஆகிறார் கொட்டாச்சி

சென்னை: அக்னி யுனிவர்ஸ் தயாரிக்கும் படம் அக்னி பத்து. ஹீரோ அவினாஷ், அலெக்சாண்டர் ஆறுமுகம். ஹீரோயின் தீபிகா. நந்தினி முக்கிய வேடம் ஏற்கிறார். மெயின் வில்லன் கேரக்டரில் கொட்டாச்சி நடிக்கிறார். காண்டீபன், ஷாம் குமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, பெரியண்ணா. இசை, திவாகர் துர்காஷ். எடிட்டர் சக்தி பா. இயக்கம் அலெக்சாண்டர் ஆறுமுகம். இந்த கதையை பற்றி டைரக்டர் கூறும்போது, ‘‘அரசாங்கம் கொடுக்கும் சலுகைகள் பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் படம் பேசுகிறது. அத்துடன் குறிப்பிட்ட சிலர் பாதிக்கும்போது அதில் உள்ள ஒரு குடும்பத்தின் கதையே இத் திரைப்படம். முடிவில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வுசொல்லும் கதையாக இந்த படம் அமைந்திருக்கிறது’’ என்றார். விரைவில் இந்த படம் வெளியாகிறது.

Tags : Kotachi ,Chennai ,Agni ,Hero Avinash ,Alexander Arumugam ,Deepika ,Nandini ,Kandeepan ,Sham Kumar ,Perianna.… ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி