×

பிரதீப் ரங்கநாதன் ஜோடியாகிறார் மமிதா பைஜு

ஐதராபாத்: தமிழ் மற்றும் தெலுங்கில் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஜோடியாக நடிக்கின்றனர். தற்காலிகமாக ‘பிஆர்4’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரவி மோகன், காஜல் அகர்வால் நடிப்பில் ‘கோமாளி’ படத்தை எழுதி இயக்கி சிறுவேடத்தில் நடித்திருந்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து இயக்கி ஹீரோவாக நடித்த ‘லவ் டுடே’ படம் வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இதையடுத்து ‘ஓ மை கடவுளே’ அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடித்த ‘டிராகன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிபெற்றது.

அடுத்தடுத்த வெற்றிகளின் காரணமாக தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் தொடக்க விழாவில் பிரதீப் ரங்கநாதன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. முழுநீள கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகும் இதில் முக்கிய வேடங்களில் சரத்குமார், ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசை அமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

Tags : Pradeep Ranganathan ,Mamita Baiju ,Hyderabad ,Keertheeswaran ,Pradeep ,Ravi Mohan ,Kajal Aggarwal ,
× RELATED நடனத்தை வெறுக்கும் ஸ்ரீலீலா