- சென்னை
- எம்.எஸ். மூர்த்தி
- மித்ரா படங்கள்
- சபரி
- ரோஹிந்த்
- ரசிதா மகாலட்சுமி
- பவன் கிருஷ்ணா
- K.R விஜயா
- ஸ்வேதா
- கே.எஸ். வெங்கடேஷ்
- எஸ். சினேகா
- குமாரி கனிஷ்கா
- ஸ்ரீலேகா
- சிங்கம் புலி
- புஜ்ஜி பாபு
- சாம்ஸ்
- அம்பானி ஷங்கர்
- பி.எல். தேனப்பன்
- முல்லை கோதண்டம்
- செவிலோ ராஜா
- ஜெயமுருகன்
- மீனாட்சி சுந்தரம்
- ஸ்ரீதர்
- ஆனந்த்
சென்னை: மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து தயாரித்து நடித்திருக்கும் படம், ‘99/66’. சபரி, ரோகிந்த், ரச்சிதா மகாலட்சுமி, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, ஸ்வேதா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம்புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், பி.எல்.தேனப்பன், முல்லை கோதண்டம் நடித்துள்ள னர்.
சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஜெயமுருகன் அரங்கம் அமைத்துள்ளார். மீனாட்சி சுந்தரம் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்ரீதர், ஆனந்த் நடனப் பயிற்சி அளித்துள்ளனர். ஃபயர் கார்த்திக் சண்டைக் காட்சி அமைத்துள்ளார். சென்னையிலுள்ள 99 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடக்கும் சில அமானுஷ்ய சம்பவம், அங்கு வசித்து வருபவர்களை பயமுறுத்துகிறது.
இதை சபரி, ரச்சிதா மகாலட்சுமி, எம்.எஸ்.மூர்த்தி, ஸ்வேதா இணைந்து எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பது கதை. அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை ஆகிய பகுதிகளிலுள்ள புத்த மடாலயத்தின் உள்ளே சென்று, ஐநூறு புத்த பிக்குகள் மத்தியில் பாடல்கள் மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

