×

லியோவில் இணைந்த மற்றொரு வில்லன் நடிகர்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், ‘லியோ’. இதில் திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் வில்லன் நடிகர் பாபு ஆண்டனி இணைந்துள்ளார். இவர், இதில் நடிப்பது பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோர் இதில் வில்லன்களாக நடிக்கிறார்கள். இப்போது, மற்றொரு வில்லனாக பாபு ஆண்டனியும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Leo ,
× RELATED சிம்மம்