×

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 6 சிலை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு

சென்னை: தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் கடந்த பல மாதங்களில் பல்வேறு குற்றவாளிகளையும் கைது செய்து சிலைகளையும் கைப்பற்றி தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.  மேலும் இவ்வழக்குகளின் நிலை குறித்தும் அவற்றில் நடைபெறும் நீதிமன்ற விசாரணை குறித்தும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் முனைவர் கி.ஜெயந்த் முரளி,இ.கா.ப.,அவர்கள் மற்றும் காவல்துறை தலைவர் திரு. இரா. தினகரன், இ.கா.ப., மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு. பெ. ரவி அவர்கள் அவ்வப்போது தகுந்த அறிவுரைகள் கூறி வந்தனர். மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்திலும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன. இம்முயற்சியின் பயனாக கணம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு கும்பகோணம் வழக்குகளின் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி.சண்முகபிரியா அவர்களின் முன்பாக வழக்குகள் விசாரணையின் போது எதிரிகள், சாட்சிகள், எதிரிகள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஆஜர் செய்து அரசு குற்ற வழக்கு நடத்துனர் திரு.கோபிகண்ணன் அவர்களின் சிறப்பான ஒத்துழைப்பினால்6 வழக்குகளுக்குகீழ்கண்ட கடந்த 29.08.2022 அன்று தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் பின்வருமாறு;1)திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட அய்யனார் கோயிலுக்கு சொந்தமான 1)முருகன், 2)பிரம்மா, 3)அம்மன், 4)அர்த்தநாதீஸ்வரர், 5)நந்தி ஆகிய கல் சிலைகள் களவு போனது தொடர்பாக கடந்த 09.06.2014ம் தேதிஎண். நிலைய குற்ற கொரடாச்சேரி 201/2014-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலைகள் கைப்பற்றப்பட்டு எதிரிகள் 1)சத்திய நாராயணன், 2)ஆனந்தராஜ், 3)சின்னதம்பி, 4)முத்துகுமரசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 4 எதிரிகளுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.2) திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மஹாவிஷ்ணு கல் சிலை களவு போனது தொடர்பாக கடந்த 08.01.2014ம் தேதி வைப்பூர் காவல் நிலைய குற்ற எண்.03/2014 -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலை கைப்பற்றப்பட்டு எதிரிகள் 1)சத்திய நாராயணன், 2)சின்னதம்பி, 3)ஆனந்தராஜ், ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 3 எதிரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.3) திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட விஸ்வரூபபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 1)பெருமாள், 2)ஸ்ரீதேவி, 3)பூதேவி கல் சிலைகள் களவு போனது தொடர்பாக கடந்த 27.08.2013ம் தேதி வடபாதிமங்கலம் காவல் நிலைய குற்ற எண். 103/2013-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலைகள் கைப்பற்றப்பட்டு எதிரிகள் 1)சத்திய 5)ரெமோ, ஆகியோர்கள் நாராயணன், 2)ஆனந்தராஜ், 3)சின்னதம்பி, 4)சக்திவேல், கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 5 எதிரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 4) திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சிவலோகநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 1)வரதராஜபெருமாள், கல் சிலை களவு போனது தொடர்பாக கடந்த 22.01.2016ம் தேதி பேரளம் காவல் நிலைய குற்ற எண்.16/2016-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலைகள் கைப்பற்றப்பட்டு எதிரிகள் 1)சத்திய நாராயணன், 2)சின்னதம்பி, 3)ஆனந்தராஜ், 4)முத்துகுமரசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 29.08.2022ம் நிலையில் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை முடிந்த தலா 3 4 எதிரிகளுக்கு படி ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.5) திருவாரூர்மாவட்டம் பேரளம்சரகத்திற்கு உட்பட்ட வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 1)வரதராஜபெருமாள், 2)ஸ்ரீதேவி, 3)பூதேவி ஆகிய கல் சிலைகள் களவு போனது தொடர்பாக கடந்த 09.12.2013ம் தேதி பேரளம் காவல் நிலைய குற்ற எண். 602/2013-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலைகள் வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி கைப்பற்றப்பட்டு எதிரிகள் 1)சத்திய நாராயணன், 2) சின்னதம்பி, 3)ஆனந்தராஜ், 4)முத்துகுமரசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 4 எதிரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சித்திவிநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான 1)அம்மன், 2)லெட்சுமிநாராயணன், 3)நந்திகேஸ்வரர் ஆகிய கல் சிலைகள் களவு போனது தொடர்பாக கடந்த 09.12.2013ம் தேதி நன்னீலம் காவல் நிலைய குற்ற எண். 274/2015-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலைகள் கைப்பற்றப்பட்டு எதிரிகள் 1)சத்திய நாராயணன், 2)சின்னதம்பி, 3)ஆனந்தராஜ், ஆகியோர் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 3 எதிரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது….

The post தமிழகம் முழுவதும் நடைபெற்ற 6 சிலை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Idol Theft Prevention Unit ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...