×

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.15 கோடி நூதன மோசடி; வாலிபர் கைது

தாம்பரம்: ஸ்ரீபெரும்புதுார் பகுதியை சேர்ந்தவர் சர்வபொம்மன் (25). சார்ட்டட் அக்கவுண்டன்ட் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவரிடம் கடந்தாண்டு வேங்கைவாசல் – மாம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜி (24) என்பவர் அறிமுகமாகி தானும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் படிப்பு முடித்துவிட்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருவதாகவும், தன்னிடம் பணம் கொடுத்தால் பங்குச் சந்தையில் அந்த பணத்தை முதலீடு செய்து இரட்டிப்பாக்கி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி சர்வபொம்மன் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரசன்ன வெங்கடேச பாலாஜியிடம்  லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். பின்னர், தான் கொடுத்த பணத்தை பிரசன்ன வெங்கடேச பாலாஜி இடம் சர்வபொம்மன் திரும்பி கேட்டபோது, அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி இதுகுறித்து சர்வபொம்மன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூருசென்று அங்குள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், நண்பர்களுடன் கேரளாவுக்கு டூர் சென்றுவிட்டு,  கேரளாவில் இருந்து பெங்களூரு வரும் வழியில் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்ததும் தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து கடந்த 24ம் தேதி கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் இருந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜியை போலீசார் பிடித்து சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சர்வபொம்மன் உட்பட பலரிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி சுமார் ரூ.15 கோடிக்கு மேல் பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. அவரை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு விலை உயர்ந்த கார்களை பறிமுதல் செய்தனர். பின்னர், சிறையில் அடைத்தனர். …

The post இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.15 கோடி நூதன மோசடி; வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dambaram ,Sarvabomman ,Sripurudur ,
× RELATED தறிகெட்டு ஓடிய ஜீப் மோதி விபத்து...