×

சமூக நீதியை நிலைநாட்டியவர் கலைஞர்: முன்னாள் நீதிபதி அக்பர் புகழாரம்

பெரம்பூர்: கலைஞரின் 4ம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் `உடன்பிறப்பே எங்கள் உயிர்சொல் கலைஞர் – பன்முக அரங்கம்’ என்ற பெயரில் சென்னை கொளத்தூர் அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐசிஎப் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்தார். இதில் தி இந்து குழுமம், இந்து என்.ராம், சென்னை உயர்நீதிமன்றம் மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, தமிழ்நாடு அரசு பொது நூலக சட்டதிருத்தக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு புகழ் உறை ஆற்றினார், இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், பகுதி செயலாளர் நாகராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் இந்து என்.ராம் பேசியதாவது, `தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை திமுக அரசு செய்து வருகிறது. ஆனால் மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆளுநர் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுக் கொண்டு இருக்கிறார். எந்த ஒரு மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதில்லை. மாநில அரசுக்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு என்பது தேவையான ஒன்று’ என தெரிவித்தார்.பின்னர் முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி பேசியதாவது, `பிறப்புக்கும் எல்லா உயிருக்கும்  அதை சொல்லிக் கொடுத்தவர் கலைஞர். காலம் எல்லாம் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமூக நீதியை நிலை நாட்டியவர். 50 ஆண்டுகாலம் ஆளுமை அப்படி ஒரு ஆளுமை இல்லை என்றால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு ஆளுமை இல்லையென்றால் நாங்கள் எல்லாம் பள்ளிக்கு சென்று இருப்போமா, கல்லூரிக்கு சென்று இருப்போமா, சட்டம் பயின்று இருப்போமா என்று தெரியவில்லை. தமிழுக்காக தமிழ் உணர்வுக்காக திராவிடத்திற்காக எல்லாரும் அரவணைத்து மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று கொண்டு வந்தவர் கலைஞர்’ என புகழாரம் சூட்டினார்….

The post சமூக நீதியை நிலைநாட்டியவர் கலைஞர்: முன்னாள் நீதிபதி அக்பர் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Akbar Pukhazaram ,Perambur ,Chennai East District ,Kolathur East DMK ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது