×

காதலர் விஜய் வர்மாவை பிரிந்தார் தமன்னா

சென்னை: காதலர் விஜய் வர்மாவை நடிகை தமன்னா பிரிந்துவிட்டார். இந்த தகவலை தமன்னாவின் மேனேஜர் உறுதி செய்துள்ளார்.தமிழில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, பாலிவுட்டுக்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். இப்போது அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப்சீரிஸில் நடித்தபோது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளும் கூட நடந்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடித்து இருவரும் சேர்ந்து வசிக்க, மும்பையில் வீடு பார்க்கும் படலமும் கூட அரங்கேறியதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் உலா வந்தன.

இந்த நிலையில், இவர்களது உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பே இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட்டதாகச் சொல்லப்படும் நிலையில், இருவரும் இனி வெறும் நண்பர்களாக மட்டுமே தொடர்வது என முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தமன்னாவிற்கு நெருங்கிய ஒருவரிடம் கேட்டபோது, ‘ஆமாம், தமன்னாவும் விஜய் வர்மாவும் பிரிந்துவிட்டனர்’ என காதல் முறிவை உறுதி செய்துள்ளார்.

Tags : Tamannaah ,Vijay Varma ,Chennai ,Bollywood ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி