×

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்; சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.!

சென்னை : அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜுலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது….

The post அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்; சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.! appeared first on Dinakaran.

Tags : GP ,RC GI ,Tamil Nadu ,Chennai High Court ,Chennai ,CPCID ,Rayappetta Com Station ,GP RC GI TD ,Tamil Nadu Govt. ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...