
சென்னை: ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ‘தல்வார்’ என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இ.எல்.வி. குழும நிறுவனங்கள் மற்றும் வார்னிக் ஸ்டூடியோஸ் நிறுவனர் டாக்டர் பாஸ்கர் இ.எல்.வி. இந்தப் படத்தை தயாரித்துள்ளார். காசி பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பிரகாஷ் ராஜ், பூரி ஜெகன்நாத், அனசுயா பரத்வாஜ், ஷின் டாம் சாக்கோ, அஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு கேசவ கிரண் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை திரிலோக் சித்து மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

