×

வரலாற்று பின்னணியில் ஹாரர் படம்

சென்னை: பிஜேஎஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தயாரிக்கும் படம், ‘மடல்’. பிரவீன் ராஜா கதாநாயகனாகவும் பிரியா லயா நாயகியாகவும் நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார். காந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சுனில் இசை அமைக்கிறார். இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. நடிகர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

படம் பற்றி ஹரிசங்கர் ரவீந்திரன் கூறும்போது, “வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஹாரர் படம் இது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழ்க் கலாச்சாரம் பற்றிய உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம். தமிழ் சினிமாவில் ஹாரரில் இதுவரை யாரும் நெருங்காத புதிய கதைக் களத்தை இதில் பார்க்கலாம்” என்றார்.

Tags : Prashanth Jason Samuel ,BJS Pictures ,Praveen Raja ,Priya Laya ,Nizhalgal Ravi ,Balasaravanan ,Vivek Prasanna ,Krishna Dayal ,Harishankar… ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு