×

தமிழில் ஹாலிவுட் பாணி சைக்கோ திரில்லர் படம்

சென்னை: தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள கிரைம் சஸ்பென்ஸ் சைக்கோ திரில்லர் படம், ‘டெக்ஸ்டர்’. இதில் ‘வெப்பன்’ ராஜூ கோவிந்த், யுக்தா பிரேமி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ஹரீஷ் பெராடி நடித்துள்ளனர். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீநாத் விஜய் இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுத, உத்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா வெளியிடுகிறார். ராம் எண்டர்டெயினர்ஸ் சார்பில் பிரகாஷ் எஸ்.வி தயாரித்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் சூரியன்.ஜி கூறுகையில், ‘அமெரிக்காவில் மிகப் பிரபலமான வெப்சீரிஸ், ‘டெக்ஸ்டர்’. சிறுவயதில் தனது அம்மாவை சிலர் கற்பழித்து கொலை செய்ததைப் பார்க்கும் சிறுவன், பெரியவனான பிறகு அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொல்வான். இது அவனுக்கு மிகவும் பிடித்துவிடுவதால், தொடர்ந்து கொலைகள் செய்வான். அக்கதையின் தொடர்ச்சியாகவே இப்படத்தின் கதையை நான் எழுதியுள்ளேன்’ என்றார்.

 

Tags : Chennai ,Weppan ,Raju Govind ,Yukta Premi ,Abhishek Joseph George ,Harish Peradi ,Aditya Govindaraj ,Srinath Vijay ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு