×
Saravana Stores

மகிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்

மகிந்திரா நிறுவனம், ஸ்கார்பியோ கிளாசிக் என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின், அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை முன்புறம் புதிய பம்பர், எல்இடி டிஆர்எல்கள், புரொஜெக்டர் ஹெட்லேம்ப், புதிய கிரில் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.  மேலும் இதில், 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மின்சாரம் மூலம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ரியர் வியூ மிரர், பின்புற வைப்பர்கள் மற்றும் வாஷர்கள், டூயல் டோன் இன்டீரியர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. புதிய மகிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் எஸ் ஷோரூம் விலையாக சுமார் ரூ.11.99 லட்சம் எனவும், கிளாசிக் எஸ்11 ரூ.15.49 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….

The post மகிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் appeared first on Dinakaran.

Tags : Mahindra ,Dinakaran ,
× RELATED பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து...