×

வெற்றியோடு திகழ வேண்டும் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: அனைவரையும் அரவணைத்துப் போற்றும் ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும் வெற்றியோடும் திகழ வேண்டும் என தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: பீகார் மாநிலத்தின் துடிப்புமிக்க இளம் எதிர்க்கட்சித் தலைவர்தேஜஸ்வி யாதவுக்குபிறந்தநாள் நல்வாழ்த்துகள், சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பீகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். நியாயமான, அனைவரையும் அரவணைத்துப் போற்றும் ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post வெற்றியோடு திகழ வேண்டும் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tejashwi Yadav ,Chennai ,M.K.Stalin ,Bihar ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர் ஒருமித்த கருத்தோடு தேர்வு: தேஜஸ்வி யாதவ் கருத்து