×

9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: செம்மொழிக்கு சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட குடியரசுத் தலைவர் விருதுகள் கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 2005-06ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுக்கு 8 பேர் வீதம் கடந்த 20 ஆண்டுகளில் மொத்தம் 160 பேருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 66 பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மொழிசார்ந்த விருதுகள் அறிவிக்கப்படுவதன் நோக்கமே, அந்த மொழி குறித்த ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக எந்த விருதும் வழங்கப்படாத நிலையில், தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் படைப்புருவாக்கத்திலும் ஈடுபடும் அறிஞர்களின் எண்ணிக்கை குறையும். அதற்கு அரசே காரணமாக இருக்கக்கூடாது.

The post 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Chennai ,B.M.K. ,Central Institute of Classical Tamil Studies ,Ramdas ,Dinakaran ,
× RELATED உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற...