×

நிறம் மாறும் உலகில் படத்துக்காக மும்பை செட்

சென்னை: சிக்னேச்சர் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, ஐரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு. தேவ் பிரகாஷ் இசை. ராம், தினேஷ், சுபேந்தர் கலை இயக்குனர்கள். படத்தொகுப்பு தமிழரசன். விழாவில் நட்டி நட்ராஜ் பேசும்போது, ‘‘நான் மும்பையில் சுற்றித் திரியாத தெருக்களே இல்லை. அந்த அளவிற்கு மும்பை எனக்கு பரிச்சயம். ஆனால் இந்தப் படத்தில் நான் மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்கு சென்றவுடன் வியந்து போனேன். ஒவ்வொரு சிறிய விசயத்தையும் கலை இயக்குநர் நேர்த்தியாக உருவாக்கி இருந்தார்’’ என்றார்.

Tags : Mumbai ,Chennai ,Signature Productions ,GS Cinema International ,Chennai.… ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி