×

அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் இணையும் படம்

சென்னை: அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அஃகேனம்’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி, அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கோகுல், நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார். படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், ‘‘இப்படத்தின் பின்னணி இசை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபலமான இசை அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்றார்.

Tags : Arun Pandian ,Keerthi Pandian ,Chennai ,Vijay Sethupathi ,Ashok Selvan ,Aishwarya Rajesh ,Gokul ,Ramya Pandian ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி