
சென்னை: முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளார் ஷிவானி நாராயணன். இவர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்தார். பிறகு, விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’, வடிவேலு நடித்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருவார். கடந்த சில மாதமாக அவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இல்லை. எங்கே போனார் ஷிவானி? என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில் நேற்று தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களை ஷிவானி பதிவிட்டார். அதைப் பார்த்து நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், உதடு வீங்கி, முக்கு உள்பட முகத்தோற்றத்தில் பெரும் மாற்றங்களுடன் காட்சி தந்தார் ஷிவானி. அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பது நன்றாக தெரிந்தது. இந்த தோற்றம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகாககத்தானே இருந்தீர்கள். ஏன் இந்த மாற்றம்? இப்படி செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
